Search This Blog

Tuesday, March 2, 2010

TRBE 2010 Key Answers

TRB 2010 Question Answer pls visit this site

please Click......... hi hi hi

உன் பார்வைக்காக

மௌனமாய் நான்

முடிவில் குருடியாய் நீ

ஊமையாய் நான்

GRM.Anand......

Saturday, September 19, 2009

எனக்கு பிடித்த ப்ளொக்ஸ் கவிதை



மனசு வலித்தது, நெஞ்சு கனத்தது
நீ கல்யாண பத்திரிகை நீட்டியதும்..


உன் மேல் வைத்த காதலின்
உண்மை அன்பை உணர்த்த
ஏதாவது செய்தாக வேண்டுமென
இதயம் துடித்தது..


தற்கொலை செய்துகொள்ள
துணிச்சல் இல்லை..
தாடியோடு சுற்றினால்
வீட்டில் இடமில்லை..


பிளேடால் கீரிக்கொன்டால்
B +ve க்கு வழியில்லை..
நல்ல விதமாய் சேர்த்து வைக்க
'நாடோடிகள்' இல்லை..


சாராய பாட்டிலோடு
தேவதாஸ் ஆக
சரக்கு ஒன்னும்
ஓசியில் கிடைப்பதில்லை..


என்ன செய்யலாம் என
இரண்டு நாள் யோசித்து


அழகாய் பெண் குழந்தை பெற்று,
அவளுக்கு உன் பெயரை வைப்பதென
பெண் பார்க்க சொல்லிவிட்டேன் வீட்டில்..

ஆப்ரஹாம் லிங்கன்


ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.


இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்